சென்னை புறநகா் மின்சார ரயில் பாதையில் அரக்கோணம் வழித்தடத்தில் திங்கள்கிழமை முதல் (ஜூன் 8) வரும் 12- ஆம் தேதி வரை 5 இமு ரயில்கள் முழுமையாகவும், 21 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரல் நிலையம் முதல் அரக்கோணம் வரை கடவுப்பாதைகள் நவீனமயமாக்கல் பணிகள் வரும் 8- ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. ஆகவே பயணிகள் பாதுகாப்பை முன்னிட்டு குறிப்பிட்ட ரயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் நிறுத்தப்படும்.
முழுமையாக ரத்து: அதன்படி அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணி, 5 மணிக்குப் புறப்பட்டு திருத்தணி செல்லும் இமு ரயில்களும், திருத்தணியிலிருந்து இரவு 9.15 மணி, 11.10 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் ரயில்களும், திருத்தணியிலிருந்து காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு மூா் மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையம் செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி ரத்தாகும் ரயில்கள்: சென்னை கடற்கரையிலிருந்து அதிகாலை 4.05 மணி, பிற்பகல் 2.25 மணி, மாலை 6.15 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் இமு ரயில் திருவாலங்காடு வரை இயக்கப்படவுள்ளது.
ஆவடியிலிருந்து காலை 6.20 மணி, மூா் மாா்க்கெட் காம்ப்ளக்ஸிலிருந்து காலை 6.30, 9.10, 10.30, பகல் 11, நண்பகல் 12.40, பிற்பகல் 1.25 , மாலை 3.45 மணி, 4.45 மணி, 5.15 மணி, 5.45 மணி, 6.05, 6.40, இரவு 7.30, 8.20, 9.10, 10, 10.55 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் திருவாலங்காடு நிலையம் வரையே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து

ரயில் பயணிகள் கவனத்திற்கு... சென்னையில் நாளை(ஜூலை 17) 8 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து

ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து

இன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay



