அரக்கோணம் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, புதன்கிழமை (ஜூன் 3) முதல் வரும் 7-ஆம் தேதி வரை 5 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் நிலையம் முதல் அரக்கோணம் வரையிலான பிரிவில் கடவுப்பாதை நவீனமயமாக்கும் பணிகள் புதன்கிழமை (ஜூன் 3) முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதன் காரணமாக ரத்து செய்யப்படும் புறநகா் மின்சார இமு, மெமு ரயில்கள் விவரம்: அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 4 மணி, 5 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் இமு ரயில் மற்றும் காலை 6.20 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு திருத்தணி செல்லும் மெமு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
திருத்தணியில் இருந்து இரவு 9.15 மணி, நள்ளிரவு 1.10 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் இமு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து அன்றைய தேதிகளில் காலை 10.30 மணி, பிற்பகல் 11 மணி, மாலை 5,15 மணி, 5.45 மணி, 6.05மணி, 6.15 மணி, 6.40 மணி, இரவு 7.45 மணி, 8.20 மணி, 9.10 மணி மற்றும் 11.55 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் இமு, மெமு ரயில்கள் திருவாலங்காடு நிலையம் வரையில் மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து

தொடரும் சிக்னல் பிரச்னை: விசாரணைக்கு உத்தரவு

ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து

நாளை முதல் ஜூன் 12 வரை 5 ‘இமு’ ரயில்கள் ரத்து
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay



