கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!

திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

train  திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில்

திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் - கோப்புப்படம்

Published On :

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு அருகே நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் - நெல்லை சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு இடையேயான பயணிகள் ரயில் சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்து அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் தூத்துக்குடி மண்டலம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் (56004) ரயில், நெல்லை சந்திப்பு - திருச்செந்தூர் பயணிகள் (56003) ரயில்கள் ஜூன் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகே நடைபெறும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளுக்காக, இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவது அவசியமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் (56752) ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 14ஆம் தேதி செய்துங்காநல்லூர் - நெல்லை சந்திப்புக்கு இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிப்பு.

இதுபோல, நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் (56753) ரயில் நெல்லை சந்திப்பு - செய்துங்காநல்லூர் வரை அதே நாளில் ரத்தாகிறது.

எனவே, இந்த நாள்களில் ரயில் பயணிகள் மாற்றுப் போக்குவரத்து வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தண்டவாளப் பராமரிப்புகள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Summary

The Tiruchendur-Nellai passenger train service has been cancelled for three days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.