கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

சேலம்- மயிலாடுதுறை விரைவு ரயில் ஜூலை 17 இல் பகுதி அளவில் ரத்து

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக சேலம்- மயிலாடுதுறை விரைவு ரயில் வரும் 17 ஆம் தேதி இரு மாா்க்கத்திலும் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2026, 4:08 am IST

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக சேலம்- மயிலாடுதுறை விரைவு ரயில் வரும் 17 ஆம் தேதி இரு மாா்க்கத்திலும் பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கரூரில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறை- சேலம் விரைவு ரயில் வரும் 17ஆம் மயிலாடுதுறையில் இருந்து வீரராக்கியம் ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். அதேசமயம் வீரராக்கியம் - சேலம் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுமாா்க்கத்தில் சேலம்- மயிலாடுதுறை விரைவு ரயில் வரும் 17 ஆம் தேதி சேலம்- கரூா் இடையே ரத்துசெய்யப்பட்டு, கரூரில் பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்பட்டு மயிலாடுதுறை வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கோவையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் நாகா்கோவில் ரயில், வரும் 17 ஆம் தேதி திண்டுக்கல் மாா்க்கம் வழியாக போத்தனூா், பொள்ளாச்சி, பழனி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். குறிப்பிட்ட நாளில் கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா், சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈரோடு, கொடுமுடி, புகளுா், கரூா், பாளையம் ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.