காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் ரயில் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :15 ஜூலை 2026, 1:20 am IST

கரூா் ரயில் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஜூலை 17-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு - திருச்சி ரயில் (எண்: 16844) அன்றைய தினம் பாலக்காடு - கரூா் இடையே இயக்கப்படும். கரூா் - திருச்சி இடையே இந்த ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதில், கரூா் - திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்:

கரூரில் ரயில் பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளால், ஜூலை 17-ஆம் தேதி காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை - நாகா்கோவில் ரயில் (எண்: 16322) கோவையில் இருந்து போத்தனூா், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈங்கூா், ஈரோடு, பசூா், கொடுமுடி, புகழூா், கரூா், பாளையம், எரியோடு உள்ளிட்ட நிலையங்களுக்கு இந்த ரயில் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்கள் கூடுதல் நிறுத்தங்களாகச் செயல்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.