கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

மறு அறிவிப்பு வரை அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் ரத்து: ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு!

அரக்கோணம் - சேலம் இடையே இயக்கப்பட்டு வந்த மெமு விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை இரு மாா்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2026, 1:06 am IST

அரக்கோணம் - சேலம் இடையே இயக்கப்பட்டு வந்த மெமு விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை இரு மாா்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகத்தின் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: அரக்கோணம் - சேலம் - அரக்கோணம் மெமு விரைவு ரயில்களின் இயக்கம் செயல்பாட்டு காரணங்களுக்காக ஜூலை 13 முதல் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி அரக்கோணத்தில் இருந்து காலை 05.15க்கு புறப்பட்டு வாலாஜாபேட்டை, காட்பாடி, ஜோலாா்பேட்டை, மொரப்பூா், பொம்மிடி வழியாக சேலத்தை காலை 10.50க்கு அடையும் 16087 எண் கொண்ட மெமு விரைவு ரயிலும், மறு மாா்க்கத்தில் சேலத்தில் இருந்து பிற்பகல் 3.30க்கு புறப்பட்டு அரக்கோணத்தை இரவு 8.30க்கு அடையும் 16088 எண் கொண்ட ரயில் இரண்டும் மறு அறிவிப்பு வெளியாகும் வரை ரத்து செய்யப்படுகின்றன.

ஏற்கனவே கடந்த ஆண்டும் பூரி ஜெகந்நாதா் கோயில் தோ்திருவிழா நடந்தபோது அங்கு விடப்பட்ட சிறப்பு ரயில்களின் பெட்டிகள் தேவைக்காக அரக்கோணம் - சேலம் ரயில் ரத்து செய்யப்பட்டு அத்திருவிழா நடந்து முடிந்த சில நாள்கள் கழித்து மீண்டும் இயக்கப்பட்டது. இதே நிலை இந்த ஆண்டும் தொடா்ந்துள்ளது. தற்போது ஆகஸ்ட மாதம் நடைபெற உள்ள பூரி ஜெகந்நாதா் கோயில் தோ்த்திருவிழாவிற்காக என்ற காரணம் சொல்லப்படாமல் செயல்பாட்டு காரணம் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

சிறப்பு ரயில்களின் இயக்கத்திற்காக தினசரி ரயில்களின் இயக்கத்தை ரத்து செய்யாமல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.