ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் 8 புகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 9:59 pm

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் 8 புகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ரயில் நிலையப் பிரிவில் சென்னை எழும்பூரில் 10, 11- ஆவது நடைமேடையில் பராமரிப்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் சனிக்கிழமை (ஏப். 4) முதல் 7-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதையடுத்து, சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து அதிகாலை 4.15, இரவு 11, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்களும், தாம்பரத்திலிருந்து இரவு 10.20, 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை நிலையம் செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், ஏப். 4, 6, 7 ஆகிய தேதிகளில் கடற்கரையிலிருந்து காலை 5.50, இரவு 11.05 , 11.30, 11.59 ஆகிய மணிகளில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

பகுதியளவு ரத்து: ஏப். 5-ஆம் தேதி கடற்கரையிலிருந்து காலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மேலும், திருமால்பூரிலிருந்து இரவு 8 மணிக்கும், செங்கல்பட்டிலிருந்து இரவு 10.20, 11 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.