சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) இரு புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்தில் சிங்கபெருமாள்கோவில் மற்றும் செங்கல்பட்டு நிலையங்களில் தண்டவாள மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) முதல் ஏப். 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதனால், ஞாயிற்றுக்கிழமை தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்லும் மின்சார ரயிலும், காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன.
பகுதியளவு ரத்து செய்யப்படும் ரயில்கள்: அதேபோல், ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில், தாம்பரத்திலிருந்தும், செங்கல்பட்டிலிருந்து காலை 8.45, 9.40, 10.40 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில்கள் சிங்கபெருமாள் கோவிலிருந்தும் புறப்படும்.
அதேபோல், சென்னை கடற்கரையிலிருந்து அதிகாலை 5.35 மணிக்கு காஞ்சிபுரம் செல்லும் ரயில், வாலாஜாபாத் வரையும், கடற்கரையிலிருந்து காலை 8.10, 8.50, 9.30, 10 மணிகளுக்கு செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடனும் நிறுத்தப்படும்.
செங்கலப்பட்டிலிருந்து பகல் 11.35 மணிக்கு கடற்கரைக்கு வரும் ரயில் காட்டாங்குளத்தூரிலிருந்து இயக்கப்படும்.
ஏப். 13 முதல் 16 வரை: வரும் ஏப். 13 முதல் 16 -ஆம் தேதி வரை கடற்கரையிலிருந்து பகல் 11.40, நண்பகல் 12.40 மணிக்கு புறம்படும் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். அதேபோல், கடற்கரையிலிருந்து நண்பகல் 12.28, 1.45 மணிக்குப் புறப்படும் ரயில்கள் காட்டாங்குளத்தூருடன் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து

பராமரிப்புப் பணி: இன்று முதல் மே 31 வரை 5 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து!

பெரம்பூா் நிலையத்தில் சிக்னல் பழுதால் புறநகா் ரயில்கள் சேவையில் பாதிப்பு
சிக்னல் கோளாறு: மின்சார ரயில்கள் திடீா் நிறுத்தம்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



