புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பிரேசிலில் இருந்து சென்னை வந்தன மெட்ரோ ரயில்கள்!

பிரேசிலில் இருந்து கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு மெட்ரோ ரயில்கள் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தன.

News image
Updated On :26 நவம்பர் 2013, 10:18 pm

பிரேசிலில் இருந்து கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு மெட்ரோ ரயில்கள் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தன.

எட்டு பெட்டிகள் அடங்கிய இரண்டு மெட்ரோ ரயில்கள் புதன்கிழமை நள்ளிரவு, ட்ரெய்லர் லாரி மூலம் சென்னை மெட்ரோ ரயில் கோயம்பேடு பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

பிரேசில் நாட்டின் சா பாலா நகரில் தயாரிக்கப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயிலின் 4 பெட்டிகள் அடங்கிய முதல் ரயில், கப்பல் மூலம் மே 31-ஆம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இந்த முதல் ரயிலுக்கான சோதனை ஓட்டம் இப்போது கோயம்பேடு பணிமனையில் உள்ள தண்டவாளத்தில் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து 2-ஆவது, 3-ஆவது ரயிலின் தயாரிப்பு பணிகளும் பிரேசிலில் நடைபெற்று வந்தன.

சோதனை ஓட்டத்தில் மெட்ரோ ரயில் சிறப்பான திறனை, வெளிப்படுத்தி வந்ததால் அதிகாரிகள் அடுத்த 2 ரயில்களை அனுப்பி வைக்க ரயில்களை தயாரித்து வரும் ஆல்ஸ்டாம் நிறுவனத்திடம் கூறினர்.

இதன் காரணமாக 2-ஆவது, 3-ஆவது ரயில் இரண்டு வாரத்துக்கு முன்பாக பிரேசிலில் உள்ள சான்டோஸ் துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஏற்றப்பட்டது. இப்போது அந்தக் கப்பல் சென்னை துறைமுக எல்லைக்கு உள்பட்ட கடல் எல்லையில் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.

மெட்ரோ ரயில் ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் சென்னை துறைமுகத்தை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்தடைந்தது. பின்பு இந்த ரயில் நாமக்கலைச் சேர்ந்த ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனம் மூலம், கனகரக உபகரணங்களைச் சுமந்து செல்லும் பிரத்யேக ட்ரெய்லர் லாரி மூலம் புதன்கிழமை இரவு துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு பணிமனைக்கு கொண்டு செல்லப்படும்.

சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில் பெட்டிகளை ட்ரெய்லர் லாரி சுமந்து செல்லும். இதற்காக புதன்கிழமை நள்ளிரவு மெட்ரோ ரயில் கொண்டு செல்லும் சாலையில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டில் 6 ரயில்கள்: 2013-ஆம் ஆண்டு இறுதிக்குள் 18 பெட்டிகள் அடங்கிய 6 மெட்ரோ ரயில்களும் பிரேசிலில் இருந்து சென்னைக்கு வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேசில் நாட்டின் லாபா நகரில் மீதமுள்ள ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான வேலைகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதில் 4-ஆவது மற்றும் 5-ஆவது ரயிலின் 91 சதவீத மின் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் பெட்டியின் வடிவமைப்பு பணிகளும் 75 சதவீதம் முடிவடைந்துள்ளன.

6,7,8-ஆவது ரயில்களின் பெட்டிகளைத் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து, உள் அலங்கார வேலைகள் ஆரம்பக் கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் 9-ஆவது ரயிலின் பெட்டிகளைத் தயாரிக்கும் பணிகளும் இப்போது நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.