48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மது, ஊழல் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும்

மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம், ஏழ்மையற்ற தமிழகம் உருவாக வேண்டும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் முக்கியமான குறிக்கோள் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

News image
Updated On :21 ஜூலை 2013, 11:43 pm

மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம், ஏழ்மையற்ற தமிழகம் உருவாக வேண்டும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் முக்கியமான குறிக்கோள் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

காந்திய மக்கள் இயக்கத்தில் பொறியியல் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் இணையும் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்று பேசியது:

காந்திய மக்கள் இயக்கத்தில் இதுவரை 68 ஆயிரம் இளைஞர்கள் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளனர்.

தற்போது புதிதாக மாணவர்களும் காந்திய மக்கள் இயக்கத்தில் இணைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் இணைந்துள்ளனர்.

மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம், ஏழ்மையற்ற தமிழகம் உருவாக வேண்டும் என்பதே இயக்கத்தின் முக்கிய குறிக்கோள். காந்திய சிந்தனையில் நுகர்பொருள் கலாச்சாரத்தை சைத்தான் கலாச்சாரம் என்று கூறப்படுகிறது. தேவைகள் மற்றும் ஆசைகளை குறைத்தாலே நுகர்பொருள் கலாச்சாரம் மறைந்து விடும். மேலும், பொது வாழ்க்கையில் தன்நலம் கருதாது பிறகுக்கு கொடுத்து உதவ வேண்டுமே தவிர, பிறரிடம் இருந்து நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை மாணவர்களுக்கு கற்றுத் தர உள்ளோம். மேலும், மக்கள் நலம் சார்ந்த புதிய அரசியல் உருவாக வேண்டும் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைமை நிலையச் செயலாளர் இனியன் ஜான் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.