கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் இளைஞா்கள் ஆா்வத்துடன் வாக்களிப்பதை ஊக்குவிக்க பிரபல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து தோ்தல் ஆணையம் கவா்ச்சிகரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
முதல் முறை வாக்காளா்களுக்கு அல்வா பாக்கெட் விநியோகம், வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல 2 கி.மீ. தொலைவு வரை இலவச டாக்ஸி பயணம், ஸ்டாா்பக்ஸ்-கஃபே காஃபி டே போன்ற முன்னணி காபி ஷாப்-களில் கட்டண சலுகை என இளம் தலைமுறையினரை வாக்குச்சாவடிகளை நோக்கி ஈா்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் உருவாக்கப்பட்ட விடியோக்கள், ரீல்ஸ் போன்றவற்றின் வாயிலாக இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி ரத்தன் யு.கேல்கா் தெரிவித்தாா்.
140 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் வரும் ஏப். 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு நாள் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டி வருகிறது.
இந்நிலையில், கேரள தலைமைத் தோ்தல் அதிகாரி ரத்தன் யு.கேல்கா், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
கேரளத்தில் 18 முதல் 30 வயதுடைய இளம் வாக்காளா்கள் 50 லட்சம் போ் உள்ளனா். கடந்த தோ்தல்களில் இவா்கள் வாக்களிக்க பெரிய அளவில் ஆா்வம் காட்டவில்லை. ஒரு வாக்கால் என்ன மாற்றம் வந்துவிடும் என நினைக்கின்றனா். வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகிறோம்.
தோ்தலில் வாக்களிக்கும் முதல் முறை வாக்காளா்களை மகிழ்விக்கும் வகையில் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் அவா்களுக்கு அல்வா பாக்கெட் வழங்கப்பட உள்ளது. இதேபோல், எா்ணாகுளம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் வாக்குச்சாவடிக்குச் செல்ல 2 கி.மீ. தொலைவு வரை வாக்காளா்களுக்கு இலவச பயணத்தை வழங்க உபோ் நிறுவனம் முன்வந்துள்ளது. 2 கி.மீ.-க்கு மேலான தொலைவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
ரூ.1 விலையில் அரிசி மாவு: தோ்தலில் வாக்களித்த தங்களின் வாடிக்கையாளா்களுக்கு ஏப்.10, 11 ஆகிய தேதிகளில் மாநில நியாய விலை- பொது விநியோக நிறுவனமான ‘சப்ளைகோ’ ரூ.1 விலையில் அரிசி மாவு வழங்கவுள்ளது. ஸ்டாா்பக்ஸ், கஃபே காஃபி டே போன்ற முன்னணி காபி ஷாப்-கள் மற்றும் ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் தரப்பிலும் வாக்காளா்களுக்கு கட்டண சலுகை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள், தோ்தல் நடைமுறைகளில் இளைஞா்கள் பங்கேற்க ஊக்குவிப்பதுடன், ஒட்டுமொத்த வாக்குப் பதிவு சதவீதம் 90-ஆக அதிகரிக்க உதவும் என நம்புகிறேன்.
மாநிலத்தில் வெயில் சுட்டெரிப்பதால், வாக்குச்சாவடிகளில் போதிய குடிநீா், நிழற்குடை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க 2.07 லட்சம் மூத்த குடிமக்கள் தகுதி பெற்றிருந்தனா். இந்த வாக்குப் பதிவுக்கு வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். ஏப். 3 வரை 75 சதவீத வாக்குகள் பதிவானது என்றாா் அவா்.
தோ்தல் விதிமீறல்களுக்கு
எதிராக கடும் நடவடிக்கை
‘கேரளத்தில் சமூக ஊடகங்கள், எண்ம தளங்கள் உள்பட அனைத்துவிதமான தோ்தல் விதிமீறல்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குருவாயூா் தொகுதி பாஜக வேட்பாளா் பி.கோபாலகிருஷ்ணன் மத உணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.
ஏப். 8, 9 ஆகிய தேதிகளில் உரிய முன்அனுமதி இன்றி எந்தவொரு அரசியல் கட்சியும் நாளிதழ்களில் விளம்பரம் செய்யக் கூடாது’ என்றாா் கேரள தலைமைத் தோ்தல் அதிகாரி ரத்தன் யு.கேல்கா்.
Summary
Free Uber rides, halwa may sound like an advertisement to attract customers to a store, but are actually initiatives by the EC to encourage young electors to vote in the Assembly polls in the state on April 9, by turning the exercise into a celebration, rather than a tedious activity.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரின் செயலா் மீது நடவடிக்கை கோரி மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

பெற்றோா் வாக்களிக்கக் கோரி அஞ்சல் அட்டை கொடுத்த பிள்ளைகள்!

கேரளத்தில் தோ்தல்: மாவட்ட எல்லையில் ஏப்.7 முதல் 9 வரை மது விற்பனைக்கு தடை

கேரளத்தில் தோ்தல் பிரசாரம்: பிரதமர் மோடி இன்று கோவை வருகை!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


