தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

தமிழகத்தில் முதல்முறை வாக்காளர்கள் எத்தனை பேர்? வயதுவாரியான வாக்காளர் விவரம்

தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய உள்ள முதல்முறை வாக்காளர்கள்

25/01/2026, TN, PONDICHERRY: First-time voters display their voter ID cards during the 16th National Voters' Day celebrations at Kamban Kalaiarangam o

வாக்காளர்கள் - Center-Center-Villupuram

Published On :15 மார்ச் 2026, 8:43 pm IST

தமிழகத்தில் முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர் என்று தேர்தல் ஆணைய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநில பேரவைகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப். 23-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் இருகட்டங்களாக ஏப். 23, 29-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் ஏப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய உள்ள வாக்காளர் விவரம் தேர்தல் ஆணைய தரவுகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

  • 100 வயது மற்றும் அதற்கும் மேல் உள்ள வாக்காளர்கள் 2,530 பேர்

  • 85 வயது - 100 வயது வரையுள்ள வாக்காளர்கள் 4 லட்சம் பேர்

  • மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம் பேர்

  • 20 - 29 வயது பருவத்திலுள்ள வாக்காளர்கள் 1.05 கோடி பேர்

  • சேவைப் பணியாளர் வாக்காளர்கள் 67,056 பேர்

  • ஆண் வாக்காளர்கள் - 2.77 கோடி பேர்

  • பெண் வாக்காளர்கள் - 2.89 கோடி பேர்

  • மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் - 7617 பேர்

  • மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் என்று தேர்தல் ஆணைய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையும் அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் மே 4-இல் வெளியாகின்றன.

Summary

TamilNadu : Chief Election Commissioner Gyanesh Kumar says, the category of our electors

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.