காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

5 மாநில தேர்தல்: 5 நாடுகளின் மக்கள்தொகைக்கு இணையாக வாக்காளர்கள் எண்ணிக்கை!

5 மாநில தேர்தல்: 5 நாடுகளில் உள்ள மக்கள்தொகைக்கு இணையாக ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை!

12-02-26-TN-CHENNAI  -  NEWS STANDALONE -  The Election Commission officials seen  demonstrating  Electronic Voting Machines (EVMs) and Voter Verifiab

வாக்காளர்கள்

Published On :

தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரலில் நடைபெறுகிறது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநில பேரவைகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப். 23-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் இருகட்டங்களாக ஏப். 23, 29-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் ஏப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையும் அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் மே 4-இல் வெளியாகின்றன.

இந்நிலையில், மேற்கண்ட 5 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய தகுதிவாய்ந்த ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையானது ஒப்பீட்டளவில் சுமார் 5 நாடுகளில் உள்ள மொத்த மக்கள்தொகைக்கு இணையான அளவில் இருப்பது சுவாரசிய தகவலாக உள்ளது.

  • தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்

  • புதுச்சேரியில் மொத்தம் 9.44 லட்சம்

  • மேற்கு வங்கத்தில் மொத்தம் 6.44 கோடி

  • கேரளத்தில் மொத்தம் 2.70 கோடி

  • அஸ்ஸாமில் மொத்தம் 2.50 கோடி என ஒட்டுமொத்தமாக 17.4 கோடி வாக்காளர்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய காத்திருக்கின்றனர்.

தேர்தல் ஆணைய தகவலின்படி, மேற்கண்ட 5 மாநில ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள்தொகைக்கு இணையாக உள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

Summary

voters of the four States and Union Territories is equivalent to the population of Australia, France, South Africa, Germany and Canada.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.