தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் கொண்டுவர 6 பேர் கொண்டு குழு: திமுக தலைமை அறிவிப்பு

மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் கொண்டுவருவதென கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற  திமுக உயர்நிலைச் செயல்திட்டக்

News image
Updated On :5 ஜூன் 2014, 10:35 am

வேல்முருகன்

மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் கொண்டுவருவதென கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற  திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலைடியல் அமைப்பு ரீதியான மாற்றம் கொண்டுவர 6 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது.  

அந்தக் குழுவில் பெ.சு. திருவேங்கடம், டி எஸ் கல்யாண சுந்தரம், இரா. ராஜமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு, வழக்கறிஞர் கே எஸ் ராதாகிருஷ்ணன், எஸ் எல் டி சச்சிதானந்தம் உள்ளிட்ட ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த் குழுவினர் மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமையாக்குவதற்கும், வலிமைப்படுத்துவதற்கும் தேவையான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்வார்கள் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.