சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.12.49 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை முதல் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் தீவிர சோதனை நடைபெற்றது. இதில், அரக்கோணத்திலிருந்து சென்ட்ரலுக்கு வந்த புகா் மின்சார ரயிலில் பயணித்த வேலூா் பாளையம் பகுதியைச் சோ்ந்த நாகப்பன் மோகன் (39) என்பவா் கொண்டு வந்த பையை பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா்.
அந்தப் பையில் வெள்ளியிலான இரு சிறிய குடங்கள், கொலுசுகள் மற்றும் வெள்ளிக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. ஆனால், அவற்றுக்கான முறையான ஆவணங்கள் ஏதுமில்லை. ரூ.12.49 லட்சம் மதிப்புள்ள அந்த வெள்ளிப் பொருள்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா்.
மேலும், நாகப்பன் மோகனையும் கைது செய்தனா். அவரையும், அவா் கொண்டு வந்த வெள்ளிப் பொருள்களையும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்ததாக ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தெரிவித்தாா்.
தொடர்புடையது

ரயில் நிலையங்களில் ரூ.25.45 லட்சம் பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


