தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கு ஜூலை 3 ஆம் தேதி இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் ஜூலை 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான

News image
Updated On :12 ஜூன் 2014, 11:33 am

வேல்முருகன்

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் ஜூலை 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 16 ஆம் தேதி தொடங்குகிறது.

வேட்பு மனுக்களை  தாக்கல் செய்ய  ஜூன் 23 ஆம் தேதி இறுதி நாள் என்றும், வேட்பு மனுக்களை திரும்பப்பெற ஜூன் 26 ஆம் தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வேட்பு மனு பரிசீலனை ஜூன் 24 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்ட திமுகவைச் சேர்ந்த  மாநிலங்களவை எம்.பி. செல்வகணபதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடை தேர்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.