தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

 காவிரி நீர் ஒழுங்குமுறை குழு  மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர

News image
Updated On :13 ஜூன் 2014, 12:50 pm

வேல்முருகன்

 காவிரி நீர் ஒழுங்குமுறை குழு  மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் 3 ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்குமுறை குழு  மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அது குறித்து படிப்படியாக நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்பதால் தற்போது வரை அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது.

 எனினும் மத்திய உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் மத்திய அரசிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டமில்லை என்று பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிடவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி பேசியுள்ளார். நீர்வளத்துறை அமைச்சரின் பேச்சால் தமிழக மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே  கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலாக கர்நாடக அனைத்து கட்சியினர் தங்களை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று மனு அளித்துள்ளனர்.  அதில் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளது என்றார்

.. மேலும் காவிரி நதிநீர் பங்கீடு குறித்த முழு விபரங்களை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அமல்படுத்தினால்தான் தமிழக விவசாயிகளின் உரிமை பாதுகாக்கப்படும் என்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.