புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அறிவித்தபடி விரைவு ரயில்களை இயக்குவதில் சிக்கல்

மழை வெள்ளத்துக்கு முன்பு சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற விரைவு ரயில்கள், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு திரும்பி வரவில்லை.

News image
Updated On :5 டிசம்பர் 2015, 9:58 pm

மழை வெள்ளத்துக்கு முன்பு சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற விரைவு ரயில்கள், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு திரும்பி வரவில்லை. இதனால் ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருந்த விரைவு ரயில் சேவைகள் மீண்டும் ரத்தானது.

சென்னையில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்ட விரைவு ரயில்கள் பலத்த மழையின் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதேபோல வெளியூர்களில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு வர வேண்டிய ரயில்களும் வழியிலேயே நிறுத்தப்பட்டன.

மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட பாண்டியன் விரைவு ரயில் மழை வெள்ளம் காரணமாக கரூர், ஜோலார்பேட்டை வழியாக திருப்பிவிடப்பட்டது. ஆனால், அரக்கோணத்தில் இருந்து சென்னை வர முடியாத காரணத்தால் அந்த ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதுபோல ஏராளமான ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு அருகில் இருக்கும் ரயில் பணிமனையில் நிறுத்தப்பட்டன.

பயணிகள் ஏமாற்றம்: கடந்த சில நாள்களாக விரைவு ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டதால், பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் வெறிச்சோடின. பயணிகளுக்கு உதவும் வகையில் சென்னை கடற்கரை, திருவள்ளூர், அரக்கோணத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.

இந்த நிலையில். சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து வழக்கமான ரயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது. இதனையடுத்து, சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்ட பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட வேண்டிய 20 விரைவு ரயில்களும், எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய 10 விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டதாக செய்தி குறிப்பு வெளியிட்டப்பட்டது.

இதன் காரணமாக வெளியூர் செல்ல திட்டமிட்ட பொது மக்கள் விரைவு ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியது: பலத்த மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும், வட மாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த ரயில்களும், தென் மாவட்டங்களில் இருந்து எழும்பூர் வர வேண்டிய ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்த ரயில் பெட்டிகள் திரும்ப வரவில்லை. எனினும், நிலமை சரி செய்யப்பட்டு திங்கள்கிழமை விரைவு ரயில்கள் வழக்கம் போல் தொடங்க வாய்ப்புகள் இருக்கிறது என்றார் அவர்.

எழும்பூரில் இருந்து ரத்து செய்யப்படும் ரயில்கள்

ரயில் எண்    வண்டியின் பெயர்

17643    காக்கிநாடா சர்கார் விரைவு

11063    சேலம் விரைவு

17651    கச்சேகுடா விரைவு

22623    மதுரை விரைவு

16853    திருச்சி விரைவு

16175    காரைக்கால் விரைவு

மற்ற ஊர்களில் இருந்து இன்று ரத்து செய்யப்படும் ரயில்கள்

ரயில் எண்    வண்டியின் பெயர்

12690    நாகர்கோயில் - சென்னை சென்ட்ரல் விரைவு

18495    ராமேஸ்வரம் - புவனேசுவரம் விரைவு

22652    பழனி - சென்னை சென்ட்ரல் விரைவு

16128    குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு

16860    மங்களூரு - சென்னை எழும்பூர் விரைவு

12686    மங்களூரு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு

16204    திருப்பதி - சென்னை சென்ட்ரல் விரைவு

12662    செங்கோட்டை - சென்னை எழும்பூர் விரைவு

சென்ட்ரலில் இருந்து ரத்து செய்யப்படும் ரயில்கள்

ரயில் எண்    வண்டியின் பெயர்

12433    ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி விரைவு

16057    திருப்பதி சப்தகிரி விரைவு

12243    கோவை சதாப்தி விரைவு

22625    பெங்களூரு டபுள் டெக்கர் விரைவு

22637    மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் விரைவு

11042    மும்பை சிஎஸ்டி விரைவு

16053    திருப்பதி விரைவு

12697    திருவனந்தபுரம் வாராந்திர விரைவு

12695    திருவனந்தபுரம் விரைவு

16203    திருப்பதி விரைவு

12967    ஜெய்ப்பூர் விரைவு

19419    ஆமதாபாத் விரைவு

12601    மங்களூரு மெயில்

22639    ஆலப்புழை விரைவு

22651    பழனி விரைவு

12673    கோவை சேரன் விரைவு

22649    ஈரோடு-ஏற்காடு விரைவு

11028    மும்பை சிஎஸ்டி விரைவு

12840    ஹெளரா மெயில்

12657    பெங்களூரு மெயில்

17313    ஹூப்ளி விரைவு

12028    பெங்களூரு - சென்னை சதாப்தி விரைவு

12027    பெங்களூரு சதாப்தி விரைவு

12244    கோவை - சதாப்தி விரைவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.