டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பயணிகளுக்கும், பயணத்துக்கும் பாதுகாப்பு..! "மொபைல் டீம்' அமைத்தது எம்.டி.சி.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி.) சார்பில், புதிதாக இரண்டு நடமாடும் குழுக்கள் (மொபைல் டீம்) அமைக்கப்பட்டுள்ளன.

Updated On :23 அக்டோபர் 2015, 9:11 pm

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி.) சார்பில், புதிதாக இரண்டு நடமாடும் குழுக்கள் (மொபைல் டீம்) அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் பயணிகளின் பாதுகாப்பையும், சீரான பேருந்து இயக்கத்தையும் உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் 3 ஆயிரம் பேருந்துகளில் தினமும் பல லட்சம் பேர் பயணிக்கின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 முதல்கட்டமாக, சட்டப் பேரவையில் தமிழக அரசு அறிவித்தபடி, சோதனை அடிப்படையில் 10 மாநகரப் பேருந்துகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பேருந்துகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும்.
 தொடர் கண்காணிப்பில்..: இதுபோல், விபத்து இல்லாத சீரான பேருந்து இயக்கத்தை உறுதி செய்யும் வகையில் 2 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட சென்னைக்கு ஒரு குழு, தென் சென்னைக்கு ஒரு குழு என இந்த இரண்டு நடமாடும் குழுவிலும் உதவிப் பொறியாளர் தலைமையில் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என 3 பேர் இடம்பெற்றிருப்பர்.
 இந்தக் குழுவினர் சர்ச்சைக்கு உரிய வழித் தடங்களில் தொடர் கண்காணிப்பில் நாள் முழுவதும் ஈடுபடுவர். மேலும், பேருந்து நிறுத்தம், பேருந்து முனையங்களில் ஓட்டுநர்களைச் சந்தித்து பாதுகாப்பாக பேருந்துகளை இயக்குவது குறித்த ஆலோசனைகளையும் குழுவினர் வழங்குவர்.
 பயணிகளுக்கும் அறிவுரை..: இதுதவிர, பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரைகளை வழங்கி ஆட்டோவை அங்கிருந்து அப்புறப்படுத்தி, பேருந்தை நிறுத்த வழி செய்வர்.
 அதுமட்டுமின்றி பயணிகளுக்கும் இந்தக் குழுவினர் அறிவுரைகளை வழங்குவர். அதாவது படிக்கட்டில் பயணிக்க வேண்டாம் எனவும், பேருந்து நின்ற பின்னர் இறங்கவும் பயணிகளை இவர்கள் அறிவுறுத்துவர்.
 இந்தக் குழுக்கள் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுரைகளை வழங்குவதோடு, பேருந்து படிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அறிவுரைகளை வழங்கி சீரான, பாதுகாப்பான பேருந்து இயக்கத்தை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
 இந்த அறிவுரைகளுக்குப் பிறகும் தொடர்ந்து விதிமுறைகளை மீறுவோர் குறித்து இந்தக் குழு அளிக்கும் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.