சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

சென்னை, காஞ்சி மாவட்டங்களில் முதல்வரின் விருது பெறும் காவல் அதிகாரிகள்

அர்ப்பணிப்புடன் சிறப்பாகப் பணியாற்றியதற்காக முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சென்னை- காஞ்சிபுரம்- திருவள்ளூர் மாவட்ட காவல் அதிகாரிகளின்

Updated On :

அர்ப்பணிப்புடன் சிறப்பாகப் பணியாற்றியதற்காக முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சென்னை- காஞ்சிபுரம்- திருவள்ளூர் மாவட்ட காவல் அதிகாரிகளின் விவரங்களை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
 இதுகுறித்து உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
 சி.பி.சி.ஐ.டி. தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் டி.எஸ்.அன்பு, காவல் துறை இயக்குநர் அலுவலக உதவி ஐ.ஜி. (நிர்வாகம்) அஸ்ரா கார்க், காவலர் தேர்வுப் பள்ளி கூடுதல் கண்காணிப்பாளர் என்.மோகன்ராஜ், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் துணை கண்காணிப்பாளர் கே.ராஜேந்திரன்.
 காஞ்சிபுரம் மாவட்டம், மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் கே.எம்.சங்கரன், சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் எஸ்.கேசவன், பூந்தமல்லி போலீஸ் பட்டாலியன் உதவி கமாண்டண்ட் ஏ.ஜனகன்,
 இதர பிரிவுகள் (ஊழல் தடுப்பு): சென்னை பாதுகாப்புப் பிரிவு துணை ஆய்வாளர் பி.துரைபாண்டியன், சென்னை தலைமையகச் சிறப்புப் பிரிவு சி.ஐ.டி. ஆய்வாளர் டி.செல்வக்கண் டேவிட், மாநில சி.ஆர்.பி. ஆய்வாளர் ஆர்.குமரேசன், சென்னை சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் எஸ்.ரவிச்சந்திரன். ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு புலன் விசாரணைப் பிரிவு ஆய்வாளர் பி.ராஜா, தமிழ்நாடு கமாண்டோப் பள்ளி ஆய்வாளர் வி.வெங்கடேசன், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஜி.நந்தகுமார், ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளர் டி.சதாசிவம்.
 பயிற்சி நிலையம்: ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு தலைமையக ஆய்வாளர் பி.விஜய் சார்லஸ், ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆய்வாளர் ஜி.உமாராணி, வேளச்சேரி போக்குவரத்து காவல் டி.சந்திரசேகரன், ஆவடி பட்டாலியன் ஆய்வாளர் சி.பஞ்சாட்சரம், சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு துணை ஆய்வாளர் பி.அமுதா, சென்னை போலீஸ் சி.ஆர்.பி. துணை ஆய்வாளர் டி.ஜெயசுதா, சென்னை கோர் செல் சி.ஐ.டி. துணை ஆய்வாளர் கே.சீமைசாமி, ஆவடி பட்டாலியன் துணை ஆய்வாளர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு கமாண்டோ படை துணை ஆய்வாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், போலீஸ் பயிற்சி நிலையம் துணை ஆய்வாளர் என்.நாகராஜன்,
 தீயணைப்புத் துறை: ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு துணை ஆய்வாளர்கள் எஸ்.ரங்கசாமி, எஸ்.இசக்கிபாண்டி மற்றும் தலைமைக் காவலர்கள், காவலர்கள் 100 பேருக்கு பதக்கம் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.