மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

மெரீனாவில் குளித்த 3 பேர் மூழ்கினர்

சென்னை மெரீனாவில் கடலில் குளித்த இரு கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் மூழ்கினர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :

சென்னை மெரீனாவில் கடலில் குளித்த இரு கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் மூழ்கினர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 கொருக்குப்பேட்டை நாகப்பாநகர் 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ரா.குமார் (21). இவர் மாநிலக் கல்லூரியில் பி.காம். மூன்றாமாண்டு படித்து வந்தார். இவரது நண்பர் நெசப்பாக்கம் கோதண்டபாணி அப்பா தெருவைச் சேர்ந்தவர் அஜித்குமார் (19). இவரும் அதே கல்லூரியில் பி.காம். மூன்றாமாண்டு படித்து வந்தார்.
 இவர்கள் திங்கள்கிழமை மாலை தங்களது நண்பர்களுடன் மெரீனா கடற்கரைக்குச் சென்றனர். அங்கு இருவரும், நண்பர்களுடன் கண்ணகி சிலை பின்புறம் கடலில் குளித்தனர். அப்போது அவர்கள் கடலுக்குள் ஆழமான பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது இருவரையும் அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது.
 இதைப் பார்த்த அவர்களது நண்பர்கள், இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
 உடனே அவர்கள், அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், காவல் ஆய்வாளர் ஏ.செல்வக்குமார் வழக்குப் பதிவு செய்தார். கடலில் மூழ்கிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
 மற்றொரு சம்பவம்: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகம்மது ரிசான் (24). இவர் சென்னை அமைந்தகரையில் தங்கியிருந்து தச்சு வேலை செய்து வந்தார்.
 ரிசான் நண்பர்களுடன் திங்கள்கிழமை மாலை மெரீனா கடற்கரைக்கு வந்தார். அங்கு அண்ணா சமாதிக்குப் பின்புறம் கடலில் ரிசான் நண்பர்களுடன் குளித்தார்.
 அப்போது, அவரை அலை இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த அவரது நண்பர்கள், ரிசானை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் ரிசானைக் காப்பாற்ற முடியவில்லை.
 இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரிசானை தேடி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.