"3 விநாடிகளில் ஒருவருக்கு ஞாபக மறதி பாதிப்பு'

உலகம் முழுவதும் 3 விநாடிகளில் ஒருவர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுகிறார் என்று, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
"3 விநாடிகளில் ஒருவருக்கு ஞாபக மறதி பாதிப்பு'

உலகம் முழுவதும் 3 விநாடிகளில் ஒருவர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுகிறார் என்று, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
 உலக "அல்சைமர்' தின விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள ஞாபக மறதி குறையுடையோரை கவனிப்போருக்கான "டெம்கேர்ஸ்' மையத்தில் அண்மையில் நடைபெற்றது.
 விழாவில் கலாúக்ஷத்ராவின் முன்னாள் இயக்குநரும், நடிகையுமான லீலா சாம்சன் கலந்துகொண்டு ஞாபக மறதி (டிமென்ஷியா) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னையில் உள்ள உதவி, மருத்துவ மையங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய கையேட்டை வெளியிட்டார்.
 இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "ஓ.கே.கண்மணி' படத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தது மறக்க முடியாத ஒன்று. இதன்மூலம் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்ட முதியோர் படும் துன்பங்களையும், அவர்களை கவனித்துக் கொள்வோர் மேற்கொள்ளும் சிரமங்களையும் உணர முடிந்தது.
 முதியோரில் பெரும்பாலானோருக்கு ஞாபக மறதி பாதிப்பு இருப்பதே தெரிவதில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்குரிய சிறப்பு மருத்துவர்களிடம் உடல், மன ரீதியான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்றார் அவர்.
 கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி: இதைத் தொடர்ந்து மனச்சிதைவு ஆராய்ச்சி மையத்தின் (ஸ்கார்ஃப்) இயக்குநர் டாக்டர் தாரா, மனநல மருத்துவ நிபுணர் ஸ்ரீதர் ஆகியோர் கூறியது: சில நோய்களால் மூளை பாதிக்கப்படும்போது நினைவாற்றல், பேச்சுத் திறன், பொருள்கள், சக மனிதரை அடையாளம் காணுதல் போன்ற செயல் திறன்கள் குறையும்.
 இந்த பாதிப்பு டிமென்ஷியா எனப்படுகிறது. உலகம் முழுவதும் 3 விநாடிகளுக்கு ஒருவர் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுகிறார். இந்தியாவில் 45 லட்சம் பேருக்கு டிமென்ஷியா பாதிப்பு உள்ளது.
 இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட 11 முதியோருக்கு 6 மாதங்கள் உதவியாக இருக்கவும், அது குறித்த திட்ட அறிக்கையை தயார் செய்யவும் நுங்கம்பாக்கம் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியின் உளவியல் துறையைச் சேர்ந்த 11 மாணவிகளைத் தேர்வு செய்துள்ளோம். குறிப்பிட்ட காலத்துக்கு இந்த மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தலா ஒரு முதியோரை கவனித்துக் கொள்வர். இந்தத் திட்டத்தின் முடிவைப் பொருத்து மேலும் சில கல்லூரிகளை அணுக முடிவு செய்துள்ளோம் என்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com