தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை திமுகவை பாதிக்கும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா இன்று (ஏப். 5) தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இம்முறை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் போட்டியிடுகிறது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப்போட்டியாக இந்தத் தேர்தல் கருதப்படுகிறது. இவை தவிர இன்ன பிற கூட்டணிகளும் இருந்தாலும் பெரும்பாலும் நான்கு முனைப் போட்டியாகவே இந்த தேர்தலை அரசியல் பார்வையாளர்கள் அணுகுகிறார்கள்.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்களுடன் எச். ராஜா பேசியதாவது:
'' அரசியலில் எதார்த்தத்தை பேச வேண்டும். விஜய்யால் யார் ஓட்டுகளை பிரிக்க முடியும். விஜய் பிரிக்கப்போவது திமுக வாக்குகளைத்தான். குறிப்பாக திருமாவளவன் கட்சி வாக்குகளை பிரிப்பார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான வாக்குகளை அவரால் பிரிக்க முடியாது. அதனால், விஜய்யின் வருகை திமுகவை நிச்சயமாக பாதிக்கும் ''என எச். ராஜா பேசினார்.
Summary
TN Election 2026 Vijay will split Thirumavalavans party votes says H. Raja
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் வரும் முன் சோஃபா வந்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன்

முதல்வர் விஜய்யின் அணுகுமுறை அரசியல் நாகரிக முதிர்ச்சிக்கு அடையாளம்! திருமாவளவன்

தொல். திருமாவளவனை நாளை சந்திக்கிறார் முதல்வர் விஜய்?
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு




