இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன்

விஜய்யை சந்தித்த பிறகு திருமாவளவன் செய்தியாளர்களுடன் பேசியது குறித்து...

News image

திருமாவளவன் - எக்ஸ்

Updated On :12 மே 2026, 5:39 pm IST

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் விஜய் சந்திக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தன் வேண்டுகோளை ஏற்று எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதாக விஜய் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது:

''முதல்வர் விஜய்யின் அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சி பாராட்டுக்குரியது. பாஜக அங்கம் வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவை விஜய் கோரவில்லை.

மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்த விஜய்க்கு அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை பரிசாக வழங்கினோம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுகவாக கருதுகிறோம். பழனிசாமியின் அணியில்தான் கொறடா உள்ளார்.

சி.வி. சண்முகம் தலைமையில் அமைந்துள்ள அதிமுக, எடப்பாடி அணிக்கு எதிராக செயல்பட்டால் வாக்குகள் செல்லுமா? பொறுப்பு நீடிக்குமா? என்பதை பேரவைத் தலைவர் முடிவு செய்வார்.

கட்சியில் இருந்து குழுவாக தனித்து இயங்கினாலும் கூட அவர்களுக்கான அங்கீகாரம் பேரவைத் தலைவரால் அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுகிறது.

தவெகவின் செய்தித்தொடர்பாளர் என்ற வகையில் ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கலாம்'' என்று கருதுகிறேன் என திருமாவளவன் பேசினார்.

Summary

CM C joseph vijay should meet Edappadi Palaniswami Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.