அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

முதல்வர் விஜய்யின் அணுகுமுறை அரசியல் நாகரிக முதிர்ச்சிக்கு அடையாளம்! திருமாவளவன்

முதல்வர் விஜய் பற்றி விசிக தலைவர் திருமாவளவன் பதிவு...

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

திமுக கூட்டணி கட்சியினரைச் சந்தித்து வாழ்த்து பெறும் முதல்வர் ஜோசப் விஜய்யின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்டாலினும் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்று கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.

தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரைச் சந்தித்த விஜய், தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளார்.

இந்நிலையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,

"மேனாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மேனாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறும் முதல்வர் விஜய்யின் இந்த அணுகுமுறை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம்.

முதல்வருக்கும் அவரை ஆரத்தழுவி வரவேற்ற மேனாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

CM Vijay approach is a sign of mature political civility: Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.