வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

பெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோ

விஜய் மூலம் பெரியார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் இளம் தலைமுறையினருக்கு கொண்டுசெல்லப்படும் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Durai vaiko

துரை வைகோ - ஏஎன்ஐ

Published On :

முதல்வர் சி. ஜோசப் விஜய் மூலம் பெரியார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் இளம் தலைமுறையினருக்கு கொண்டுசெல்லப்படும் என மதிமுக எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இல்லத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் இன்று (மே 11) வருகைப்புரிந்தார்.

வைகோவின் மகன் துரை வைகோ, வீட்டு வாசலுக்கு வந்து விஜய்க்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் விஜய்யை வீட்டினுள் துரை வைகோ அழைத்துச் சென்றார்.

வீட்டினுள் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வைகோ மாலை அணிவித்தார். பின்னர் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வீட்டிற்குள் வைகோவை சந்தித்து விஜய் நலம் விசாரித்தார். முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு, வைகோ வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

விஜய் சந்திப்பு குறித்து செய்தியாளர்களுடன் துரை வைகோ பேசியதாவது:

''மாநில வளர்ச்சிக்குத் தேவையாக நடவடிக்கைகளை முதல்வர் விஜய் எடுக்க வேண்டும். ஊழல் அற்ற அரசாங்கமாக விஜய் உடைய அரசு இருக்கும் என கூறியிருந்தார். அதனை ஆட்சிக்கு வந்த பிறகு செய்துகாட்ட வேண்டும். இளம் தலைமுறைக்கு பெரியார், அண்ணா குறித்து தெரியாது, ஆனால் விஜய் மூலம் அவர்கள் அதை தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.

சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை அண்ணாவும், பெரியாரும் முன்வைத்தனர். அதையே முதல்வர் விஜய்யும் தனது ஆட்சியில் கடைபிடித்தால் அது வரவேற்கத்தக்கது'' என துரை வைகோ குறிப்பிட்டார்.

Summary

The principles of Periyar and Anna will be propagated through Vijay Durai Vaiko

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.