விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை முதல்வர் விஜய் நாளை (மே12) சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிளுக்கு நேரில் நன்றி தெரிவித்த விஜய் நாளை திருமாவளவனையும் சந்தித்து நன்றி தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோரை முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளதாகவும் தகவல் தெரிய தெரிவந்துள்ளது.
தமிழகத்தில் 108 தொகுதிகளில் வென்ற பிறகும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் பிற கட்சிகளின் ஆதரவை நாடியது.
இதையடுத்து, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்தன.
விஜய்க்கு விசிக கடைசி நேரத்தில் ஆதரவு அளித்து பெரும்பான்மைக்கு உதவியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் தவெக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, இன்று காலை கூடிய தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று வருகின்றனர்.
Summary
Reports suggest that Chief Minister Vijay is set to meet Viduthalai Chiruthaigal Katchi (VCK) leader Thol. Thirumavalavan tomorrow (May 12).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் தொல். திருமாவளவன் சந்திப்பு

விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்
கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றாத விசிகவினர்: தொல் திருமாவளவன்

திருச்சி கிழக்கில் நாளை விஜய் பிரசாரம்: 27 கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதி!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை


