பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

எம்எல்ஏவாகப் பதவியேற்ற பிரேமலதா விஜயகாந்த்! எழுந்து நின்று வாழ்த்திய விஜய்!

பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏவாகப் பொறுப்பேற்றது பற்றி...

News image

பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏவாகப் பொறுப்பேற்றார். - TN Assembly live

Updated On :11 மே 2026, 1:11 pm IST

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல்முறையாக இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று(மே 11) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்று வருகின்றனர்.

இடைக்கால அவைத் தலைவர் சோழவந்தான் கருப்பையா உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அமைச்சர்களும் மற்ற உறுப்பினர்களும் பதவியேற்று வருகின்றனர்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல்முறையாக விருத்தாச்சலம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வாகியுள்ளார்.

இதையடுத்து இன்று சட்டப்பேரவைக்கு வந்த அவர், சட்டப்பேரவை வாயிலைத் தொட்டு வணங்கிவிட்டு உள்ளே வந்தார்.

பின்னர் முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பின் விஜய்க்கு வணக்கம் தெரிவித்தபோது விஜய் எழுந்து நின்று பிரேமலதாவுக்கு கையெடுத்துக் கும்பிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

Summary

Premalatha Vijayakanth Sworn In as MLA; Vijay Stands Up to Congratulate Her

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.