மே 4 ஆம் தேதி வெற்றிச் செய்தி வரும், அதன்பிறகு விமர்சனங்களுக்கும் சேர்த்து பதில் தருகிறேன் என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 ஆம் தேதி(திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.
ஏப். 29 மாலை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் பெரும்பான்மையாக திமுக ஆட்சியமைக்கும் என்றே கருத்துக்கணிப்புகள் உள்ளன.
இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,
"தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் 2 நாள்களே இருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம். அதிக எதிர்பார்ப்போ அதிக கற்பனைகளோ தேவையில்லை. மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி அமோக வெற்றி பெறும். அண்ணன் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார்.
மே 4 ஆம் தேதி வெற்றிச் செய்தி வரும். விமர்சனங்களுக்கும் சேர்த்து மே 4-ம் தேதி பதில் தருகிறேன். அனைவரின் எதிர்பார்ப்பும் தேமுதிகதான், விமர்சனங்களும் தேமுதிகவுக்குத்தான். வாழ்த்தினாலும் திட்டினாலும் தேமுதிகதான். வாழ்க வசவாளர்கள். மே 4 ஆம் தேதி பதில் சொல்கிறேன். நாங்கள் 10 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவைச் செல்வோம்" என்று கூறினார்.
Summary
MK Stalin will return as Chief Minister again: Premalatha vijayakanth
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








