திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசுகையில், "இது வழக்கமான வாக்குப் பதிவுதானேதவிர, இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.
எஸ்ஐஆர் மூலம் லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வாக்குகள் நீக்கப்படாமலிருந்து, இந்த வாக்குப்பதிவு நடந்திருந்தால், பழைய மாதிரியே வாக்குப்பதிவு நடந்திருக்கிறது என்றே நாம் பேசியிருப்போம்.
ஆனால், எஸ்ஐஆர் மூலம் இதுவரையில் பதிவு செய்யப்படாமலிருந்த, வெறுமனே எண்ணிக்கையில் மட்டுமே இருந்த வாக்குகள் லட்சக்கணக்கில் நீக்கப்பட்டிருப்பதால், கூடுதலாக வாக்குப்பதிவு நடந்திருப்பதாகத் தோற்றமளிக்கிறது. ஆனால், இது உண்மையல்ல.
ஒவ்வொரு தேர்தலுக்கும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய வாக்காளர்கள் 20 லட்சம் முதல் 25 லட்சம் பேர் கூடுதலாக இணைவார்கள். அதுபோலவே இந்தத் தேர்தலிலும் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, மாபெரும் வெற்றியைப் பெறும். தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் மாறும் என்று நான் சொல்லியிருந்தேன்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விஜய்யின் வாக்கு சதவிகிதத்தைப் பொருத்து, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மாறும்" என்று தெரிவித்தார்.
Summary
VCK Leader Thirumavalavan expresses confidence that the DMK will once again form the government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







