வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் அகில இந்திய அளவில் நடத்தப்படும் "நெட்' தேர்வு போல் "செட்' தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி பெறுவதற்காக அகில இந்திய அளவில் "நெட்' தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது.
இதுபோல், மாநில அளவில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் சார்பில் "செட்' தேர்வு நடத்தப்படுகிறது.
2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் "செட்' தேர்வு நடத்தும் அனுமதியை அன்னைத் தெரசா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 21-ஆம் தேதி நடத்தப்பட உள்ள தேர்வு தொடர்பாக, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவசரமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடரவும் சில அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
பணம் கொடுத்து தேர்ச்சி பெற வாய்ப்பு என புகார்?: இந்த முறையும் வெளிப்படைத்தன்மைக்கான நடைமுறைகள் இடம்பெறவில்லை என்பதோடு, பல்வேறு குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. பணம் கொடுத்து தேர்ச்சி பெற அதிக வாய்ப்பு உள்ளது தொடர்பாக யுஜிசி-யிடம் புகார் அளித்துள்ளதாகவும், ஒரிரு நாள்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளதாகவும் "நெட்-செட்' அமைப்பு நிர்வாகி சுவாமிநாதன் தெரிவித்தார்.
மாற்றம் வர வாய்ப்பில்லை என பல்கலை. விளக்கம்: இதுகுறித்து பல்கலை. பதிவாளர் என். கலாவிடம் கேட்டபோது, அவர் கூறியது: தேர்வுக்காக கேள்வித்தாள் தயாரிக்கும் பணிகளை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொண்டுள்ளப்படுகிறது. ஓரிரு நாள்களில் பணிகள் நிறைவு பெறும். தேர்வு முடிந்தவுடன் கேள்வித் தாளை எடுத்துச் செல்ல தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார். தேர்வர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் கேள்விக்குரிய விடைகளும், தேர்வர் பதிவு செய்த விடைகளும் வெளியிடப்பட மாட்டாது. நேரடியாக தேர்வு முடிவுதான் அறிவிக்கப்படும்.
சந்தேகம் இருந்தால், பல்கலைக்கழகத்திடம் முறையிட்டு விடைத்தாள் நகலை பெற்று சோதித்துக் கொள்ளலாம். இதில் மாற்றம் வர வாய்ப்பே இல்லை. தேர்வில் மாற்றம் செய்வது குறித்து உயர் கல்வித் துறை செயலர்தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.
புகார் வந்தால் கண்காணிப்பு என யுஜிசி அறிவிப்பு: இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறியது:
கூடுதல் தேர்வுக் கட்டணம், பாடங்கள் விடுபட்டுள்ளது, ஒரே தேதியில் இரண்டு தேர்வுகள், குறைந்த கால அவகாசத்தில் தேர்வு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வருகின்றன.
அதேநேரம், தேர்வில் தேர்ச்சி பெற பணம் பெறப்படுவதாக எந்தப் புகாரும் வரவில்லை.
புகார் அளிக்கப்பட்டால், கண்காணிக்க யுஜிசி சார்பில் குழு ஒன்று அமைக்கப்படும் என்றார்.
"நெட்' வழியில் தேர்வு நடந்தால் பிரச்னை இல்லை!
தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் பல்வேறு நடைமுறைகள் "நெட்' தேர்வில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, தேர்வு முடிந்தவுடன் கேள்வித் தாளையும், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் பதிவு செய்யப்பட்ட விடை நகல் தாளையும் எடுத்துச் செல்ல தேர்வர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தேர்வு முடிந்து ஒரு வார காலத்துக்குப் பிறகு, விடைகளும், தேர்வர் பதிவு செய்த விடைகளும் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும். இதை பார்த்து, தேர்வர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள முடியும். ஒரு மாத காலத்துக்குப் பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதில், மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருந்தால் அதை எதிர்த்து புகார் தெரிவிக்கவும் தேர்வருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், "செட்' தேர்வில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

