திருடும் வீடுகளில் பெண்களுக்கு தொந்தரவு: கிருஷ்ணகிரி இளைஞர் கைது
சென்னையில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடுவதோடு அங்குள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லையும் அளித்து வந்த கிருஷ்ணகிரி இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


சென்னையில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடுவதோடு அங்குள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லையும் அளித்து வந்த கிருஷ்ணகிரி இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: அடையாறு, கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
இந்தத் திருட்டில் ஈடுபடும் நபர், தான் திருடும் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை கத்தி முனையில் மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் தொடர் புகார்கள் எழுந்துவந்தன.
இது தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அறிவழகன் (28) என்பவர்தான் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து அறிவழகனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில், பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடுவதும், பின்னர் அங்குள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதும் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...