தேசியக் கொடியை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாட்டின் நற்பெயரை அவமதிக்கும் விதமாக பொது இடங்கள், ஏனைய இடங்களில் தேசியக் கொடி அல்லது இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரித்தல், சிதைத்தல், அவமதிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை: இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இந்த இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
கலாசார, விளையாட்டுப் போட்டிகளின்போது காகிதத்தால் செய்யப்பட்ட கொடிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவற்றைத் தரையில் போடக் கூடாது. தேசியக் கொடிக்கான மரியாதையை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் அழைப்பு!

பெனால்டி கொடுக்காதது ஏன்? இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்ட நடுவர்களை விமர்சிக்கும் ரசிகர்கள்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


