சென்னை ராமாபுரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம், 155 -ஆவது வார்டில் ராமாபுரம் ஏரி அமைந்துள்ளது. ஆக்கிரமிப்புகள் காரணமாக 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி தற்போது 8 ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்த ஏரிக்கரையோரத்தில் 50 -க்கும் மேற்பட்ட கடைகளும், 24 வீடுகளும் கட்டப்பட்டிருந்தன. மேலும், இந்த ஏரி அருகே நெசப்பாக்கம், சின்ன போரூரை இணைக்கும் பாரதி சாலை உள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்: இந்த ஏரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்
நடைபெற்று வந்தது. இந்நிலையில், ராமாபுரம் ஏரி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 கட்டடங்களை அகற்ற நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையினர் போலீஸார் உதவியுடன் ராமாபுரம் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை அகற்றும் பணியை புதன்கிழமை தொடங்கினர். இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் இப்பணி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


