
5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: மாநகராட்சி தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான 5 லட்சத்து 44 ஆயிரத்து 604 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான 5 லட்சத்து 44 ஆயிரத்து 604 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஒரு நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின்-ஏ விளங்குகிறது.
இதைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் மருத்துவ சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அனைத்து சென்னை ஆரம்ப சுகாதார மையங்கள், சென்னை மகப்பேறு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்களில் கடந்த 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை 5 நாள்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான 5,44,604 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டுள்ளது. இது திட்ட இலக்கில் 95 சதவீதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






