நாடு முழுவதும் சித்த மருத்துவ தினம் புதன்கிழமை (டிச. 26) கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக, சென்னையில், புதன்கிழமை நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத யோசோ நாயக், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து, மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் கனகவள்ளி கூறியதாவது:
அகத்தியர் பிறந்த நட்சத்திரமான மார்கழி ஆயில்ய நாளானது சித்தா தினமாக கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டாவது ஆண்டாக அந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதையொட்டி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களும், நிகழ்ச்சிகளும் நாடு முழுவதும் நடத்தப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சிறப்புப் பேரணியும் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!

நடிகைகள் எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்: நித்யா மெனன்

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

பவானி - துபைக்கு ரூ. 10,000! அரசுப் பேருந்து டிக்கெட்டால் அதிர்ச்சி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


