சென்னையில் ரயிலில் போதைப் பாக்கு கடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பெரம்பூர் ரயில் நிலையம் அருகே செம்பியம் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் விதத்தில் மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினராம். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த மூட்டையை சோதனையிட்டதில் 70 கிலோ எடையுள்ள போதைப் பாக்குகளை கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை செய்தனர்.
இதில் அவர்கள், ஆவடி கன்னிகாபுரத்தைச் சேர்ந்த நே.சுரேஷ்குமார் ஜெயின் (41), அரக்கோணம் மூதூரை சேர்ந்த ரா.சசிகுமார் (38), ஆவடியைச் சேர்ந்த கே.கோயமன் (39) என்பதும் பெங்களூரில் இருந்து ரயில் மூலம் போதைப் பாக்கை கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த ஜோ ரூட்!

கட்சி மேடைகளில்கூட தவிர்க்க வேண்டியதை, பேரவையில் பேசலாமா? திருமாவளவன்

மக்கள் சேவையில் விஜய்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


