எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

போலி பாஸ்போர்ட் வழக்கு: இருவர் கைது

சென்னையில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 10:54 pm

DIN

சென்னையில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். 
சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவிலிருந்து வந்த ஒரு விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் கலீல் பாட்ஷா, அப்துல் மஜீத் ஆகிய இருவரின் பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவை போலியானவை எனத் தெரியவந்தது.
விசாரணையில், இவர்கள் பெரம்பலூர் மாவட்டம் விஜயபுரத்தைச் சேர்ந்த த.கண்ணன் (41), அதே பகுதியைச் சேர்ந்த சி.மருதமுத்து (41) என்பதும், இருவரும் சவுதி அரேபியா சென்று திரும்பியதும், போலி பாஸ்போர்ட்டுக்காக கண்ணன், கலீல் பாட்ஷா என்ற பெயரிலும், மருத
முத்து அப்துல்மஜீத் என்ற பெயரிலும் பயணம் செய்தது தெரியவந்தது. 
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் இருவரையும் சென்னை மத்தியக் குற்றப் பிரிவில் ஒப்படைத்தனர். இருவரும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.