வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.66.7 லட்சம் மதிப்புள்ள 2.1 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: திங்கள்கிழமை மேற்கொண்ட தொடர் சோதனையின்போது, 4 பேர் சவுதி அரேபியா, துபை ஆகிய நாடுகளிலிருந்து ரூ.66.7 லட்சம் மதிப்புள்ள 2.1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சவுதி அரேபியாவிலிருந்து சென்னை வந்த மஹபுல் ஷேக் (31) என்பவரிடம் இருந்து ரூ. 14.7 லட்சம் மதிப்புள்ள 464 கிராம் தங்கப்பட்டைகளும், துபையிலிருந்து வந்த அஸ்மத் பாஷா (34), முகமது பரூக் (38), நூர் முகமது (47) ஆகிய 3 பேரிடமிருந்து ரூ,30 லட்சம் மதிப்புள்ள 968 கிராம் தங்கக்கட்டிகள், பட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பார்சலில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.66.7 லட்சம் மதிப்பிலான தங்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

