ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் விளையாடியது.
குயிண்டன் டி காக் சதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பெற்ற குயிண்டன் டி காக் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 60 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, நமன் திர் 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ஹார்திக் பாண்டியா 14 ரன்கள் எடுத்தார். ரியான் ரிக்கல்டான் 2 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 0 ரன், திலக் வர்மா 8 ரன்கள், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு ஒரு ரன் எடுத்து ஏமாற்றமளித்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்கோ யான்சென் மற்றும் ஷஷாங் சிங் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
Summary
In the IPL match against Punjab Kings, Mumbai Indians, batting first, scored 195 runs for the loss of 6 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடப்பு ஐபிஎல் சீசன் பாதியிலேயே மும்பை அணியிலிருந்து விலக முடிவெடுத்த ஹார்திக் பாண்டியா?
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு; கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா!

திலக் வர்மா அரைசதம்; ஆர்சிபிக்கு 167 ரன்கள் இலக்கு!

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




