ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நியூ சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் விளையாடியது.
அபிஷேக் சர்மா அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 220 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அதிகபட்சமாக அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 28 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கிளாசன் 39 ரன்களும், டிராவிஸ் ஹெட் 38 ரன்களும் எடுத்தனர். கேப்டன் இஷான் கிஷன் 27 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷஷாங் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சேவியர் பார்ட்லெட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
Summary
Batting first in their IPL match against Punjab Kings, Sunrisers Hyderabad scored 219 runs for the loss of 6 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; ஆர்சிபிக்கு 256 ரன்கள் இலக்கு!

ஒரே நாளில் பல சாதனைகளை நிகழ்த்திய அபிஷேக் சர்மா..! டி20 கிரிக்கெட்டின் நாயகன்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




