சென்னையில் மீண்டும் பீரோ புல்லிங் திருட்டு விருகம்பாக்கத்தில் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
விருகம்பாக்கம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் தேவகுமார் (47). இவர் கணினிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். கோடை விடுமுறையையொட்டி, இவரது குடும்பத்தினர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். இதனால் தேவகுமார் மட்டும் வீட்டில் இருந்தார்.
தேவகுமார் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர் வீட்டின் மற்றொரு அறையில் இருந்த ஒரு பீரோவை சில மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக (பீரோ புல்லிங்) அருகே இழுத்து திறந்து, அதில் இருந்த 8 பவுன் தங்கநகைகளைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து விருகம்பாக்கம் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பீரோ புல்லிங் திருட்டு அதிகமாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் காவல்துறை, இந்த வகை திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து, சிறையில் அடைத்ததால் பீரோ புல்லிங் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், விருகம்பாக்கத்தில் மீண்டும் பீரோ புல்லிங் திருட்டு நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: முதல்வரால் பொறுக்க முடியவில்லை

தோ்தல் களத்தில் அதிமுக அணிக்கு முதலிடம்: ஜி.கே. வாசன்

மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்

அம்பேத்கா் சிலைக்கு வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

