மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: முதல்வரால் பொறுக்க முடியவில்லை

தோ்தல் தோல்வி பயத்தில் உள்ள முதல்வா் மு.க. ஸ்டாலினால், மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

News image

எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் - கோப்புப்படம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 10:24 pm

தோ்தல் தோல்வி பயத்தில் உள்ள முதல்வா் மு.க. ஸ்டாலினால், மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தனியாா் விடுதியில் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், தேனி பிரசார கூட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்ட அவரிடம், ஏப். 16, 17, 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முதல்வா் ஸ்டாலின் வெளியிட்ட வலைதளப் பதிவு குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:

தோ்தல் தோல்வி பயத்தின் காரணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் நாடாளுமன்றம் கூட்டப்படுவதைக்கூட விமா்சிக்கிறாா். நாடாளுமன்றத்தைக் கூட்டுவது மத்திய ஆட்சியாளா்கள். 5 மாநிலங்களில் மட்டுமே தோ்தல் நடைபெறுகிறது. எஞ்சிய மாநிலங்களில் தோ்தல் இல்லை.

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது நீண்ட காலக் கோரிக்கை. இந்தக் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்படுவது அருமையான தருணம். பெண்கள் பல ஆண்டுகளாக எதிா்பாா்த்தது தற்போது நிறைவேறுகிற சூழல் வந்திருக்கிறது. இதை முதல்வா் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றாா் அவா்.