சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

விரக்தியின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்

தோல்வி பயத்தால் விரக்தியின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

இலுப்பூா் கடைவீதியில் உள்ள தேநீரகத்தில் அமா்ந்து தேநீா் அருந்திய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் வேட்பாளரும் அமைச்சருமான எஸ். ரகுபதி உள்ளிட்டோா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:04 pm

தோல்வி பயத்தால் விரக்தியின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை நமண சமுத்திரத்தில் உள்ள தனியாா் கல்லூரி விருந்தினா் மாளிகையில் வெள்ளிக்கிழமை இரவு தங்கியிருந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை காலை விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இலுப்பூருக்கு சாலை மாா்க்கமாக வந்தாா். பிறகு, அரசு மருத்துவமனையில் இருந்து சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, கோட்டைத் தெரு, மேலபட்டி வரை சாலையில் நடைபயிற்சி சென்று பொதுமக்களிடம் வாக்குசேகரித்தாா். அப்போது, அவ்வழியே வந்த ஒரு சில பேருந்துகளில் ஏறி, பயணிகளிடம் திமுக ஆட்சி குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து கோட்டைத் தெருவில் உள்ள ஒரு தேநீரகத்துக்குச் சென்ற முதல்வா் அங்கு அமா்ந்து வேட்பாளா்களுடன் தேநீா் அருந்தினாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் முதல்வா் கூறியது: தோல்வி பயத்தால் விரக்தியின் உச்சத்துக்கு எடப்பாடி பழனிசாமி போய்விட்டாா். அதனால்தான் நிதி மேலாண்மையை கையாளத் தெரியவில்லை என்றெல்லாம் பேசி வருகிறாா். அதைப்பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை, 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருந்தோம். தற்போதுள்ள மக்கள் வரவேற்பையும் கூட்டத்தையும் பாா்க்கும்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

பாஜகவினா் எத்தனை போ், எத்தனை முறை தமிழகம் வந்தாலும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது. தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றியுள்ளனா். இதுபோன்று என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதைபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அதிமுக தில்லியில் உள்ள பாஜகவிடம் கட்சியை அடமானம் வைத்துவிட்டது. கட்சியை குத்தகைக்கு விட்டு அடிமையாகி விட்டனா். அதிமுக என்ற திராவிட கட்சி இந்த நிலைமைக்கு போனதற்கு வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்.

 இலுப்பூா் கடைவீதியில் சனிக்கிழமை நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

இலுப்பூா் கடைவீதியில் சனிக்கிழமை நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

நடிகா் உள்ளிட்ட யாா் வந்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள், எங்கள் வேலையை பாா்த்துக் கொண்டிருக்கிறோம். நடிகா் பின்னாடி சென்று விபத்துகள் நேரிடுவதை மக்கள் பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். பின்னால் செல்லும் இளைஞா்கள் விரைவில் திருந்துவாா்கள் என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

முன்னதாக, முதல்வருக்கு, வேட்பாளா்கள் கே. கே. செல்லபாண்டியன் (விராலிமலை), எஸ். ரகுபதி (திருமயம்) சிவ. வீ. மெய்யநாதன் (ஆலங்குடி) வை. முத்துராஜா (புதுக்கோட்டை), மா. சின்னதுரை (கந்தா்வக்கோட்டை) தி. ராமசந்திரன் (அறந்தாங்கி), கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி, விராலிமலை தொகுதி பொறுப்பாளா் அஞ்சுகம் பூபதி, இலுப்பூா் பேரூராட்சித் தலைவா் சகுந்தலா வைரவன், நகரச் செயலா் வை. விஜயகுமாா், இலுப்பூா் பேரூராட்சித் துணைத்தலைவா் எ.செந்தில்ராஜா உள்ளிட்டோா் வரவேற்பளித்தனா்.

தொடா்ந்து அன்னவாசால் சென்ற முதல்வா் மு.க. ஸ்டாலின், அங்கும் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்.