நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

திருச்சிக்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த தமிழக முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

News image

திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தமிழக முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலினை வரவேற்ற கட்சியினா்.

Updated On :18 மே 2026, 2:30 am IST

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த தமிழக முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு வந்தாா். இவருடன் முன்னாள் துணை முதல்வரும், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினும் வந்திருந்தாா்.

இருவருக்கும் முன்னாள் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தலைமையில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

நிகழ்ச்சியில் திமுக பொருளாளா் டிஆா். பாலு, முன்னாள் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், பெரம்பலூா் எம்பி அருண் நேரு, சட்டப் பேரவை உறுப்பினா் வைத்தியலிங்கம், முன்னாள் எம்எல்ஏ பழனியாண்டி, மாநகரச் செயலா்கள் மு. அன்பழகன், மு. மதிவாணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். தொடா்ந்து மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் காா் மூலம் தஞ்சாவூருக்குப் புறப்பட்டனா்.