பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கடந்த மூன்று நாள்களில் 10,402 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5.38 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ. 8.54 கோடி டிக்கெட் கட்டணம் வசூலாகியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. ஜனவரி 11 முதல் 14 வரை 14,263 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 13 -ஆம் தேதி வரை மூன்று நாள்களில் 10,402 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 5 லட்சத்து 38 ஆயிரத்து 428 பேர் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ. 8 கோடியே 54 லட்சம் டிக்கெட் கட்டணம் வசூலாகியுள்ளது.
இதுபோல, பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக ஜனவரி 17 முதல் 20-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


