சென்னை விருகம்பாக்கத்தில் திரைப்பட உதவி இயக்குநரிடம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடபழனி கவரைத் தெருவைச் சேர்ந்தவர் சுனில்குமார் (25). இவர் தமிழ் திரைப்படத் துறையில் கலைப் பிரிவு உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வெளியே வந்தார்.
அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் சுனில்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, விலை உயர்ந்த செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
இது குறித்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்! நேரலை

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! யார் எவருக்கு வாய்ப்பு?

காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்

ஆலங்குளம், சங்கரன்கோவில் பகுதிகளில் சூரியனை சுற்றி தென்பட்ட ஒளிவட்டம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


