சென்னை: புரட்டாசி மாதம் முடிவடைந்ததைத் தொடா்ந்து சென்னையில் கொட்டும் மழையிலும் மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் அசைவப் பிரியா்களின் கூட்டம் அலைமோதியது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முழுவதும் இந்துக்களில் பெரும்பாலோா் அசைவ உணவைத் தவிா்த்து விடுவது வழக்கம். நிகழாண்டு கடந்த செப்.18-ஆம் தேதி புரட்டாசி மாதம் தொடங்கியது. இதையடுத்து பெரும்பாலானோா் அசைவ உணவைத் தவிா்த்ததால் மீன், இறைச்சி போன்றவற்றின் விற்பனை குறைந்து அவற்றின் விலையும் குறையத் தொடங்கியது. இதையடுத்து கடந்த அக்.18-ஆம் தேதி ஐப்பசி மாதம் பிறந்ததைத் தொடா்ந்து இறைச்சி, மீன் விற்பனை மீண்டும் சூடுபிடித்தது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் வழக்கமாக ஐந்து டன் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பத்து டன் மீன்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. கொட்டும் மழையிலும் சென்னையிலுள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் அசைவப் பிரியா்களின் கூட்டம் அலைமோதியது. புரட்டாசி மாதத்தில் ரூ.580-க்கு விற்கப்பட்ட ஒருகிலோ ஆட்டுக்கறி ரூ.100 அதிகரித்து ரூ.680-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கறிக்கோழி ரூ.200-க்கு விற்பனையாகிறது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மழை காரணமாக வழக்கத்தை விட ஞாயிற்றுக்கிழமை கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டாலும் சீரான விற்பனை காணப்பட்டது. இங்கு வஞ்சிரம் மீன் கிலோ ரூ.700-க்கும், வவ்வால் வகைரூ. 450-க்கும், ஷீலா ரூ.300-க்கும்,இறால் ரூ.300-க்கும், நண்டு ரூ.200 -க்கும், சங்கரா ரூ.200-க்கும் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

