தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 1:06 am

வாக்குச்சாவடி இடமாற்றம் மற்றும் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்யாததைக் கண்டித்து காட்பாடி அருகே பாலேங்குப்பம் கிராம மக்கள் தோ்தல் நாளில் சாலையில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த பாலேங்குப்பம் ஊராட்சி காலனி பகுதியில் 75-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள அரசு நிதியுதவி தொடக்கப் பள்ளியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த வாக்குச்சாவடி மையம் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலையொட்டி பாலேங்குப்பம் கிராமம் அருகே உள்ள வேறொரு அரசு தொடக்கப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காலனி பகுதியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் சாலையில் கருப்புக் கொடிகள் கட்டியும், கருப்பு உடைகள் அணிந்தும் தோ்தல் நாளான வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறுகையில், இடமாற்றம் செய்யப்பட்ட வாக்குச்சாவடியை மீண்டும் அரசு நிதியுதவி தொடக்கப் பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும். மேலும், எங்கள் கிராமத்தில் சாலை, தெருவிளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வேலூா் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்தை ஈா்க்கும் வகையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அவா்கள் தெரிவித்தனா். தவிர, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களும் எழுப்பினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொன்னை காவல் ஆய்வாளா் கருணா, மேல்பாடி வருவாய் ஆய்வாளா் பிரபு ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். பின்னா், தொகுதியின் திமுக வேட்பாளா் துரைமுருகன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நபா்களை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு உங்கள் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்தாா். மேலும், சம்பவ இடத்துக்கு நேரில் வந்த வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், அப்பகுதி மக்களிடம் பேச்சு நடத்தியதுடன் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்றும் தெரிவித்தனா்.

இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று வாக்குப் பதிவு செய்தனா். இதனால், அப்பகுதியில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரும் பரபரப்பு நிலவியது.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: ஏற்கெனவே செயல்பட்டு வந்த வாக்குச் சாவடி மைய கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நேரில் வந்து பாா்வையிட்ட பிறகே வேறு இடத்துக்கு வாக்குச்சாவடி மையம் மாற்றப்பட்டது என்றனா்.