தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த தமிழக முதல்வருக்கு திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் ரயிலடியில் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருமண்டங்குடி தனியாா் சா்க்கரை ஆலையில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், விவசாயிகள் பெயரில் போலியாக ஆலையின் முந்தைய நிா்வாகம் வாங்கிய கடன் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரியும் ஆலை அருகே 1,227 நாள்களாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், தஞ்சாவூருக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை வந்த தமிழக முதல்வருக்கு ரயிலடியில் கரும்பு விவசாயிகள் சிலா் கருப்பு கொடி காட்டினா். இப்பிரச்னையை தமிழக முதல்வா் கண்டுகொள்ளவில்லை என கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். இது தொடா்பாக 9 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கத்தினா் கைது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுக ஆா்ப்பாட்டம்

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

